பும்ராவுக்கு பதிலாக அணிக்கு திரும்பும் 24 வயது வீரர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான்.. குவியும் வாய்ப்பு!

துலீப் கோப்பையை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கொளதம் கம்பீர் மாஸ்டர் திட்டமொன்றை வைத்து உள்ளார்.

பும்ராவுக்கு பதிலாக அணிக்கு திரும்பும் 24 வயது வீரர்.. கம்பீரின் மாஸ்டர் பிளான்.. குவியும் வாய்ப்பு!

துலீப் கோப்பையை வைத்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கொளதம் கம்பீர் மாஸ்டர் திட்டமொன்றை வைத்து உள்ளார்.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சுமார் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

இதில் ஆஸ்திரேலியாவுடன்  ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில், டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியம்.

தற்போது இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே உள்ள நிலையில்,  காயம் காரணமாக கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பிறகு முகமது சமி விளையாடவில்லை.

துலீப் கோப்பைக்கான அணியில் இளம் வீரர் புறக்கணிப்பு... பிசிசிஐ  அதிரடி... நடந்தது என்ன?

இதனால், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு சிறந்த வாய்ப்பாக துலீப் கோப்பையை பயன்படுத்த கம்பீர்  தீர்மானித்துள்ள நிலையில்,  24 வயதான காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதில் அவர் சரியாக செயல்பட்டால் இந்திய அணியில் அவர் தெரிவு செய்யப்படாம். அத்துடன், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமத் , ஆவேஷ் கான், யாஷ் தயால், முகமது சிராஜ், விஷக் விஜயகுமார், துசார் தேஷ் பாண்டே, ஹர்ஷித் ரானா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்பில் சிறப்பாக செயற்படும் வீரர்களை தேர்வு செய்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க கம்பீர் பிளான் போட்டு இருக்கிறார். 

இதுவரை இருந்த பயிற்சியாளர்களில் யாரும் செய்யாத இந்த முயற்சிக்கு ரசிகர்கள் வரவேற்று அளித்துள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp