அலைபேசிக்கு அடிமையான மகனுக்கு எதிராக தாய் முறைப்பாடு
13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் காலி - பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இணையம் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது மகனை மீட்டு தருமாறு தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
தாயாரின் முறைப்பாட்டிற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் மகன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மாவட்ட நீதிமன்றத்தினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை பிள்ளையின் பாதுகாப்பை தந்தையிடமே வழங்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP மற்றும் GOOGLE NEWS பக்கத்தில் இணையுங்கள்.