திருந்தாத கம்பீர்.. மோசமான முடிவுகள்.. இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே!

2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

திருந்தாத கம்பீர்.. மோசமான முடிவுகள்.. இந்தியாவின் தோல்விக்கு அதுதான் காரணமே!

2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களை சேர்த்ததுடன், இந்திய அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்களை குவித்தது.

ரோஹித் சர்மா 64 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த வீரர்களில் அக்சர் படேலை தவிர அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 

இந்த நிலையில், 42.2 ஓவர்களில் இந்திய அணி 208 ரன்களை மட்டுமே எடுத்து மேசமான தோல்வியை சந்தித்துள்ளதுடன், இதன் மூலமாக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக வாண்டர்சே 6 விக்கெட்டுகளையும், அசலங்க 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், 11 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அணி இந்திய அணியை டிஃபெண்ட் செய்து வென்றுள்ளது. 

இந்த நிலையில், இந்திய அணியின் இந்த தோல்விக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிடில் ஆர்டரில் செய்த மாற்றங்களே காரணமாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகின்றது.

அதாவது, நம்பர் 4 வீரராக இடதுகை பேட்ஸ்மேன் களமிறங்க வேண்டும் என்பதில் கவுதம் கம்பீர் தீவிரமாக உள்ளதுடன், ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை களமிறக்கி சொதப்பிய நிலையில், 2வது போட்டியில் சிவம் துபேவை களமிறக்கினார். 

அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற, மீண்டும் அக்சர் படேலை களமிறக்கி அதிர்ச்சி கொடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

நேரம் செல்ல செல்ல பிட்சில் ஸ்பின் அதிகமாகி கொண்டே போனதுடன், பேட்ஸ்மேன்களை முன்பே களமிறக்கி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் அதனை செய்ய கம்பீர் தவறிவிட்டார்.

அதாவது, இடது - வலது கூட்டணியில் கவனத்தை செலுத்திய கம்பீர், பிட்ச் மற்றும் ஸ்பின்னை கணிப்பதில் கோட்டைவிட்டுள்ளார். 

இதனால் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஸ்பின்னை கணிக்க முடியாமல் பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினர். 

இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு கம்பீரின் சோதனை முயற்சிகளே காரணமாக அமைந்துள்ளதுடன், கம்பீர் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp