3ஆவது டெஸ்ட்டில் 3 பேருக்கும் இடமில்லை: அணி மீட்டிங்கில் கம்பீர் அதிரடி!

மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி, பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது.

3ஆவது டெஸ்ட்டில் 3 பேருக்கும் இடமில்லை: அணி மீட்டிங்கில் கம்பீர் அதிரடி!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், பகலிரவு டெஸ்டாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி, பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது. இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஒரு போட்டியில் தோற்றாலும கூட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும். 

இதனால், அடுத்த மூன்று டெஸ்டிலும் தொடர்ந்து அபராமாக செயல்பட்டு, 4-1 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்திய அணிக்கு நிலையான ஓபனர்கள் இல்லை. முதல் போட்டியில் கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் இருவரும் சேர்ந்து, 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மேட்ச் வின்னர்களாக இருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ராகுல், ஜெய்ஷ்வால் இருவரும் சேர்ந்து, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 68 ரன்களைதான் சேர்த்தார்கள். 

இதனால், மூன்றாவது டெஸ்டில், ஜெய்ஷ்வாலும் ராகுல் ஓபனரா இருப்பாரா அல்லது ரோஹித் சர்மா ஓபனரா இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஹர்ஷித் ராணா 16 ஓவர்களை வீசி, ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. 

ஹர்ஷித் ராணாவுக்கு பவுன்ஸ் மற்றும் இன் ஸ்விங் பந்துகள் மட்டுமே வீசத் தெரிகிறது. இதனால், அவரது பந்துகளை துல்லியமாக கணித்து விளையாடுகிறார்கள். இதுவும், இரண்டாவது டெஸ்டில் தோற்க ஒரு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு நடைபெற்ற அணி மீட்டிங்கில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியபோது, மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் 11-யை உறுதி செய்யும் வகையில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்போது பேசிய கம்பீர், ‘‘2ஆவது டெஸ்டில், எந்த வீரரும் சிறப்பாக செயல்படவில்லை. நிதிஷ் ரெட்டி மட்டுமே, ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். இரண்டாவது டெஸ்டில், ஹர்ஷித் ராணா நம்பிக்கையளிக்கும் வகையில் பந்துவீசவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் மீதும், முழு நம்பிக்கை ஏற்படவில்லை. ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் ஓபனர் இடத்தை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என கம்பீர் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், மூன்றாவது டெஸ்டிற்கான ஓபனர் இடத்தில், மீண்டும் ரோஹித் சர்மா ஓபனராக களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஸ்பின்னர் இடத்தில், வாஷிங்டன் சுந்தரும், வேகப்பந்து வீச்சாளர் இடத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு மாற்றாக ஆகாஷ் தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp