இந்த 2 வீரர்களுக்கு அணியில் இடமில்லை.. கம்பீர் அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த 2 வீரர்களுக்கு அணியில் இடமில்லை.. கம்பீர் அதிரடி தீர்மானம்!

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து கம்பீர் தெளிவான பதிலை கூறியிருக்கிறார். இந்திய அணியின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் என்றால் அது கே எல் ராகுல் தான். 

15 பேர் கொண்ட அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்காக இரண்டு பேரும் பிளேயிங் லெவனில் இடம்பெற முடியாது. ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை அவர் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பையில் கேஎல் ராகுலை வைத்து தான் நாங்கள் விளையாட போகிறோம் என்று கம்பீர் கூறி உள்ளார்.

அத்துடன், இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கப்பட்ட ஜெய்ஷ்வாலுக்கும் சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் இல்லை என்ற நிலைப்பாட்டை கம்பீர் கூறி உள்ளார்.

ஜெயிஸ்வாலை நாங்கள் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரிலும் விளையாட வைக்க முடிவு எடுத்தோம். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் அவர் நல்ல பார்மில் இருந்தார்.

ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், ஒரு இன்னிங்ஸை வைத்து ஒரு வீரரை நாம் எடை போடக்கூடாது. ஸ்ரேயாஸ், எங்கள் அணியின் எவ்வளவு முக்கியமான வீரர். எந்த தொடராக இருந்தாலும் அதில் ஸ்ரேயாஸ் முக்கிய வீரர் தான் என்றும் கம்பீர் கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp