92 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.... கம்பீர் வேண்டாம்.. அப்போதே சொன்ன ரோஹித்... யார் கேட்டாங்க!

டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சியாளரை கொண்டு வருமாறு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

92 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.... கம்பீர் வேண்டாம்.. அப்போதே சொன்ன ரோஹித்... யார் கேட்டாங்க!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பெற்ற மோசமான தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி 92 ஆண்டுகளில் இல்லாம ஒரு மோசமான சரித்திரத்தை இந்திய அணி படைத்து விட்ட சூழலில் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலக வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிசிசிஐயின் தலைவராக கங்குலி இருந்த போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் டி 20க்கு என இரண்டு கேப்டன்கள் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஒருநாள், டி 20 கேப்டனாக ரோகித் சர்மாவும் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி தொடர வேண்டும் என்று அவர் கூறியதுடன், ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் விராட் கோலி நீக்கப்பட்டதை அடுத்து டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து விராட் கோலி ராஜனாமா செய்தார்.

இந்த நிலையில், இதனை சுட்டிக் காட்டியுள்ள ரசிகர்கள் டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரும் ஒரு நாள் டி20 என தனி பயிற்சியாளரை கொண்டு வருமாறு கூறி வருகின்றனர்.

பேட்ஸ்மேனாக இருந்தபோதே டெஸ்ட் போட்டிகளில் கம்பீர் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது என்ற நிலையில், கம்பீர் எப்படி டெஸ்ட் அணிக்கு பயிற்சி தருவார் என்று பலரும் கம்பீரின் நியமனத்தின் போதே கேள்வி எழுப்பினார்கள். 

இறுதிப் போட்டி இனி ரொம்ப கஷ்டம்... புள்ளி பட்டியலில் சரிவு... இக்கட்டான நிலையில் இந்திய அணி!

அத்துடன், தங்களுக்கு ராகுல் டிராவிட் தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று ரோகித் சர்மாவே வலியுறுத்தினார். ஆனால், ராகுல் டிராவிட் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்த நிலையில், கம்பீரை, டி20 மற்றும் ஒரு நாள் போட்டியின் தலைமை பயிற்சியாளராக வைத்துவிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் லட்சுமனை இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கம்பீரை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் லக்ஷ்மன் நல்ல பெயரை வைத்துள்ளதுடன், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிறப்பானவர் என்பதால், அவர் பயிற்சி வழங்கினால் இந்திய அணியின் இளம் வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வது தொடர்பில் பயிற்சி பெறுவார்கள் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp