பாடசாலை ஆரம்பம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடங்கும்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை குறித்து கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி புதிய ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் இலங்கையின் பாடசாலைகளின் கல்வி தவணைகளின் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
அத்துடன், சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
இதேவேளை, சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024 மே - ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சை 2024 டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை நடைபெறும் திகதிகள் மற்றும் கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.