சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இம்மாத இறுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 4 அல்லது 5 நாட்களில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp