இரட்டை சதத்தால் ஆப்கானை நொறுக்கிய அவுஸ்திரேலிய அணி, ஒரு தவறால் ஆப்கானுக்கு ஏற்பட்ட தோல்வி!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 சேர்த்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மோதிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் 7விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், இறுதியில் 292 ரன்கள் எட்டி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 சேர்த்தது.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹேட் டக் அவுட்டாக, மார்ஸ் 24 ரன்களிலும் ,டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஜோஸ் இங்கிலீஷ் டக்அவுட் ஆகியும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆப்கான் வீரர்களை மோசடி செய்ய முயற்சித்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. கண்டுபிடித்த நடுவர்!
இதனால் ஆஸ்திரேலிய அணி 49 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 91 ரன்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்தில் நின்ற மேக்ஸ்வெல் கொடுத்த ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான் தவற விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட மேக்ஸ்வெல் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தனி ஆளாக நின்று 128 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 293 எடுத்து வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.