கிடு கிடு என தங்கம் விலை உயர்வு!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று 8வது நாளாக போர் நடந்து வருகிறது. இதன் எதிரொலியால், தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இன்று 8வது நாளாக போர் நடந்து வருகிறது. இதன் எதிரொலியால், தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 54 டொலர் அதிகரித்ததே இந்தியாவிலும் விலை உயர காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல், தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.44,082க்கு விற்பனை செய்யப்படுகிறது.