அநுராதபுரம், ஜயஸ்ரீ மகா போதி விகாரைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் வழிப்பாடுகளில் ஈடுபட்டனர்.

வடமத்திய மாகாண பிரதான மாகாநாயக்க தேரரான பல்லேகம ஸ்ரீனிவாச தேரரிடம் ஆசிபெற்ற பின்னர், உடமலுவட பகுதிக்கு சென்று ஆசிப் பெற்றனர்.

உடமலுவட பகுதியில் கூடியிருந்த தேரர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வழங்கினர்.

சமய வழிபாடுகளின் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது.