சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு ஏற்கெனவே பல நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு ஏற்கெனவே பல நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.