சொதப்பிய ஹர்திக் பாண்டியா... 4 ஓவரில் 42 ரன்... நடந்தது என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் மட்டும் 27 ரன்களை விட்டுக் கொடுத்து சொதப்பினார்.

சொதப்பிய ஹர்திக் பாண்டியா...  4 ஓவரில் 42 ரன்... நடந்தது என்ன?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் மட்டும் 27 ரன்களை விட்டுக் கொடுத்து சொதப்பினார்.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்த நிலையில், அவர் வீசிய மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து இருந்தாலும். மீண்டும் 20 வது ஓவரை வீசிய போது இரண்டு வைடுகள் உட்பட 11 ரன்களை விட்டுக் கொடுத்து மீண்டும் சொதப்பினார். 

4 ஓவர்கள் முடிவில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இந்திய அணியின் மற்ற பவுலர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கும் குறைவாகவே ரன்களை கொடுத்து இருந்தனர். 

ஆனால், ஹர்திக் பாண்டியா 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து இருந்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

133 ரன்கள் இலக்கை இந்திய அணி 12.5 ஓவர்களில் சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், ஹர்திக் பாண்டியாவின் மோசமான பவுலிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 10.5 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும். 3 வைடுகளை வீசி இருந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியினபின் வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த நிலையில் அப்போதும் அவர் 11 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

20 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டை வீழ்த்திய போதும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது அவரது பந்து வீச்சின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை. 

ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி என இரண்டு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் போதும் என முடிவு செய்து முகமது ஷமியை தேர்வு செய்யாமல் விட்டது இந்திய அணி நிர்வாகம்.

அதே சமயம் இந்தப் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்டியாவை முழு நேர வேகப் பந்துவீச்சாளராக இந்திய அணி பயன்படுத்தி வரும் நிலையில் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது ஏமாற்றத்தை அளித்து வருகிறது. 

இனி பகுதி நேர பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பாமல் முழு நேர வேகப்பந்துவீச்சாளரகளை தேர்வு செய்ய வேண்டும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp