உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா மிஸ்ஸிங்.. என்ன நடந்தது?

ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த குழுவில் இடம் பெறவில்லை.

உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியா மிஸ்ஸிங்.. என்ன நடந்தது?

நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முதற்கட்டமாக ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட ஒன்பது வீரர்கள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்த குழுவில் ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த குழுவில் இடம் பெறவில்லை. 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் மோசமான தோல்வியை பெற்றது.

அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில் அந்த அணியில் இடம்பெற்று இருந்த  வீரர்கள் முதற்கட்டமாக அமெரிக்காவுக்கு செல்லும் குழுவில் இருந்தனர்.

அதன்படி, மும்பை அணியின் ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். ஆனால், ஹர்திக் பாண்டியாவை மட்டும் காணவில்லை. 

ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரை விட்டு பிரிய உள்ளதாகவும், விவாகரத்து வாங்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியது.

எனினும், இருவரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா டி20 உலக கோப்பைக்கான அணியுடனும் பயணிக்கவில்லை என்பதால் அவரது நிலை என்ன என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp