ரோகித்தை ஒதுக்கி வைக்க காரணம் இதுதான்... ஹர்திக்கின் மாஸ்டர் பிளான்! 

ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே மும்பை அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

ரோகித்தை ஒதுக்கி வைக்க காரணம் இதுதான்... ஹர்திக்கின் மாஸ்டர் பிளான்! 

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. 

ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே மும்பை அணியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகின்றன. அதேபோல் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள வீட்டில் இருந்தே பயிற்சிக்கு வந்து செல்கிறார். 

ரோகித் சர்மாவின் அனுபவத்தை ஹர்திக் பாண்டியா பயன்படுத்தி கொள்ள மறுப்பது ஏன் என்று பலருக்கும் குழப்பம் உள்ளது. மறைமுகமாக ரோகித் சர்மாவை மும்பை அணியில் இருந்து கழற்றிவிடும் பணியில் ஹர்திக் பாண்டியா ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. 

இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவை பயன்படுத்தும் போது, அவரது இடத்தை எளிதாக மற்றொரு பேட்ஸ்மேனால் நிரப்பிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் கடந்த 6 சீசன்களாகவே ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மெகா ஏலத்தின் போது மும்பை அணி தரப்பில் 4 வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள். அப்போது ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மாவின் பெயர் இருக்கக் கூடாது என்பதற்காக ஹர்திக் பாண்டியா இம்பேக்ட் பிளேயராக அவரை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் கவனம் ரோகித் சர்மா மீது இல்லாமல் தன் பக்கம் இருக்கவும் ஹர்திக் பாண்டியா அவரை ஓய்வறையிலேயே முடக்கி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp