இளம் வீரருக்கு ஆப்பு வைத்த  கம்பீர் -  இனி இந்த 2 வீரர்களுக்குத்தான் வாய்ப்பு - அணி மீட்டிங்கில் அதிரடி!

ஐபிஎலில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து, அதுவும் கடைசி 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, பெஸ்ட் பினிஷர் என்பதை நிரூபித்தார்.

இளம் வீரருக்கு ஆப்பு வைத்த  கம்பீர் -  இனி இந்த 2 வீரர்களுக்குத்தான் வாய்ப்பு - அணி மீட்டிங்கில் அதிரடி!

மகேந்திரசிங் தோனிக்கு பிறகு இந்திய டி20 அணியில் பெஸ்ட் பினிஷருக்கான இடம், நீண்ட காலமாக காலியாக இருந்தது. இந்நிலையில், ஐபிஎலில் ரிங்கு சிங் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து, அதுவும் கடைசி 5 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து, பெஸ்ட் பினிஷர் என்பதை நிரூபித்தார்.

இதனைத் தொடர்ந்து, உடனே இந்திய அணியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை, ரிங்கு சிங் சரியாக பயன்படுத்தி, கடைசி நேரத்தில் களமிறங்கி பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். இந்நிலையில், ஐபிஎல் 17ஆவது சீசனில், ரிங்கு சிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், டாப் ஆர்டரிலும் களமிறக்கி பார்த்தார்கள். அப்போதும், ரிங்கு சிங்கின் ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால், இந்திய டி20 அணியில் ரிங்கு சிங்கின் இடம், பிரச்சினையாக மாறியது. ரிங்கு சிங் பார்ம் அவுட்டில் இருப்பதால், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், ரிங்கு சிங்கிற்கு இனி வரும் டி20 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. அதாவது, அவர் இனி அதிரடியாக செயல்பட்டாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேச டி20 தொடரில் இடம்பெற்ற வீரர்கள் மத்தியில் கம்பீர் பேசும்போது, ‘‘இந்திய டி20 அணியில் இனி ஹர்திக் பினிஷராக இருப்பார். மேலும், ரியான் பராக்கும் விரைவில் பினிஷர் ரோலில் ஆடுவார். ஆல்-ரவுண்டர்கள் பினிஷர்களாக இருப்பதுதான் அணிக்கு நல்லது’’ எனக் கூறியிருக்கிறார்.

ரிங்கு சிங், கடந்த இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே தேவைப்படுகிறார். 10-12 பந்துகளை எதிர்கொள்வதற்காக, ஒரு வீரரை அணியில் சேர்ப்பது சரிபட்டு வராது என்பதே கம்பீரின் பார்வையாக இருக்கிறது. பந்துவீச்சிலும் பங்களிப்பு செய்ய வேண்டிய ஆல்-ரவுண்டர் வேண்டும் என கம்பீர் முடிவு செய்துள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp