பும்ரா தடுமாற்றம்... காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. நடந்தது என்ன?

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பும்ரா தடுமாற்றம்... காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. நடந்தது என்ன?

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய போட்டியில் அமெரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன், அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். 

சிராஜ் மற்றும் பும்ரா விக்கெட்கள் வீழ்த்தா விட்டாலும் முதல் சில ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி வந்தனர். ஹர்திக் பாண்டியா மிகக் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 

ஆனால், பும்ரா 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த போதும், ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். பும்ரா நான்கு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். 

கடந்த இரண்டு போட்டிகளில் பும்ரா ஒட்டுமொத்தமாக ஏழு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்று இருந்தார். 

ஆனால், இந்த முறை அவரைக் காட்டிலும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...