ரோஹித் சர்மாவை காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா... இவர் மட்டும் இல்லைனா காலி!

அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்தியா சந்திக்க உள்ளதுடன், அந்தப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளன. 

ரோஹித் சர்மாவை காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா... இவர் மட்டும் இல்லைனா காலி!

டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய அணியின் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளதுடன், இந்திய அணி ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

அடுத்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகளை இந்தியா சந்திக்க உள்ளதுடன், அந்தப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ளன. 

அங்கு உள்ள மைதானங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

அமெரிக்காவில் நடந்த போட்டிகளில் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் என மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களுடன் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியாவை ரோஹித் சர்மா பயன்படுத்தினார்.

ஆனால், சூப்பர் 8 சுற்றில் வேகப் பந்துச்சாளர்களில் ஒருவரை நீக்கி விட்டு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்களை வீச தயாராக இருக்க வேண்டும் என்பதுடன், ஒருவேளை சில பிட்ச்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாமல் மாறினால், அதனை சமாளிக்க இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களையும் அணியில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் தலைவலியை ஹர்திக் பாண்டியா கேப்டன் போக்கி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தாலும், டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

குரூப் சுற்றில் நியூயார்க் பிட்ச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்த நிலையில், அதே போன்ற பிட்ச்களே வெஸ்ட் இண்டீஸ்-இல் இருக்கும் என்பதால், ஹர்திக் பாண்டியா விக்கெட்களையும் வீழ்த்தும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது.

எனவே, மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களில் முகமது சிராஜை நீக்க கேப்டன் ரோஹித் முடிவு செய்து இருப்பதாகவும், அதன் மூலம் அணியில், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் எனறும் சுழற் பந்துவீச்சில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது.

அரையிறுதியில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்! அப்படி நடக்கவில்லை என்றால் வெளியேறுவது உறுதி!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சார்ப்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் மூன்று போட்டிகளில் பங்கேற்று தலா 7 விக்கெட்கள் வீழ்த்தி ஹர்திக் மற்றும் அர்ஷ்தீப் சிங் முதல் இடத்தில் உள்ளனர். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp