இதை செய்யாட்டி ஹர்திக்கை சேர்க்க கூடாது: பிசிசிஐக்கு ரோஹித் போட்ட நிபந்தனை!

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கவுள்ளதால் இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதை செய்யாட்டி ஹர்திக்கை சேர்க்க கூடாது: பிசிசிஐக்கு ரோஹித் போட்ட நிபந்தனை!

நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் என்றால் அதற்கு ரோஹித் நிபந்தனை விதித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கவுள்ளதால் இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஸ்லோ விக்கெட்கள் பிட்ச்கள்தான் அதிகம் என்பதால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தில் பாதி இப்போதே நிறைவடைந்து விட்ட நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணிப் பட்டியலை, மே முதல் வாரத்தில் கொடுத்தாக வேண்டிய நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

அதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தீவிரமாக்கியுள்ளது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் மும்பை அணியில் இரு பிரிவாக இருக்கும் பிரச்சினை டி20 உலகக் கோப்பை அணித் தேர்விலும்  தாக்கம் செலுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று மதியம் நடைபெற்றபோது, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க வேண்டுமாக இருந்தால், இனி வரும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை, மிகச்சிறப்பாக வீச வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால், ஷிவம் துபேவை தான் அணியில் சேர்க்க வேண்டும் என ரோஹித் நிபந்தை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசவில்லை. ஓவருக்கு 10+ ரன்களை விட்டுக்கொடுத்து வருவதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னதாக கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடிக்கும் வகையில் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா காலில் இன்னமும் வலி இருப்பதால்தான், அவரில் சிறப்பாக பந்துவீச முடியவில்லை எனக் கருதப்படும் நிலையில், டி20 உலகக் கோப்பையில் அவர் இடம்பிடிப்பது சந்தேகமாகவே உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp