பந்துவீச ஹர்திக் மறுப்பு... இதுதான் காரணம்... அதிர்ச்சியில் நிர்வாகம்.. ஏற்பட்டுள்ள சிக்கல்! 

முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை அணி, அடுத்து பலமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பந்துவீச ஹர்திக் மறுப்பு... இதுதான் காரணம்... அதிர்ச்சியில் நிர்வாகம்.. ஏற்பட்டுள்ள சிக்கல்! 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள, தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. இந்நிலையில், முதல் போட்டியில் ரோஹித் சர்மாவை, ஹர்திக் மாறிமாறி பீல்டிங் நிற்க வைத்தும், ரோஹித் ஆலோசனை கூற வரும்போது, அவரை புறக்கணித்ததும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்ல, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸியும் திருப்திகரமாக இல்லை. பௌலர்களை ரொட்டேட் செய்வது, பீல்டிங் செட்டப் போன்ற விஷயங்களில் ஹர்திக் பாண்டியா தடுமாற்றத்துடன்தான் செயல்பட்டு வருகிறார்.

முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை அணி, அடுத்து பலமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசி, சராசரியாக ஓவருக்கு 10+ ரன்களை விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்டியா, அதன்பிறகு கடைசி இரண்டு போட்டிகளிலும் பந்துவீசவில்லை. கேப்டன்ஸி அழுத்தம் காரணமாகதான் பந்துவீசவில்லை எனக் கருதப்படுகிறது.

ரோஹித் மற்றும் பிசிசிஐ மீது கிஷன் கடும் அதிருப்தி.. களத்தில் கொடுத்த ரியாக்‌ஷன் இதுதான்.. ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில், டெல்லிக்கு எதிராக வெற்றியைப் பெற்றப் பிறகு பேட்டிகொடுத்த ஹர்திக் பாண்டியா, ''நேரம் வரும்போது பந்துவீசுவேன். நான் நலமுடன்தான் இருக்கிறேன்'' எனக் கூறினார். ஆனால், அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு, முகுது பகுதியில் லேசான வலி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பந்துவீசினால், பிரச்சினை அதிகமாகும் என்பதால்தான், அவர் பந்துவீசவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரிய வந்தப் பிறகு, மீண்டும் ரோஹித்திடம் கேப்டன்ஸியை ஒப்படைக்க மும்பை நிர்வாகம் முடிவு செய்த நிலையில், 'என்னால் மீண்டும் கேப்டனாக செயல்பட முடியாது' என ரோஹித் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை, ஏப்ரல் 11ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது. அடுத்து, ஏப்ரல் 14ஆம் தேதி சிஎஸ்கேவை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் மும்பையில்தான் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp