இந்திய அணியின் புதுக் கேப்டன் இவர்தான்! அஜித் அகார்கர் வெளியிட்ட தகவல்!

ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.

இந்திய அணியின் புதுக் கேப்டன் இவர்தான்! அஜித் அகார்கர் வெளியிட்ட தகவல்!

ஜூன் 1 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கவுள்ளதுடன், லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்பட்டது.

நேற்று 3 விக்கெட்களை எடுத்த இளம் வீரர் இன்று காலமானார்.. நடந்தது என்ன? 

இந்திய அணியில், 15 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது . ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.

நீண்ட காலமாக ஓய்வில் இருந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் 17ஆவது சீசனில் விளையாடி வரும் நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில், துணைக் கேப்டனாக இடம்பெற்றுள்ளார். இது, பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா குறித்துப் பேசிய அஜித் அகார்கர், ''துணைக் கேப்டன் குறித்து விவாதிக்கவே இல்லை. ஹர்திக்தான் அதற்கு பொறுத்தமானவர். முன்பே தீர்மானித்துவிட்டோம். 

ஹர்திக்கை சேர்ப்பதால், லெவன் அணியை தேர்வு செய்வது எளிதாகிறது. அணியின் பலத்தை ஹர்திக் கூட்டுகிறார். இவர் தவிர்க்க முடியாத ஒரு வீரர்'' எனக் கூறினார்.

அஜித் அகார்கரின் இந்த பேட்டியின் மூலம், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்குப் பிறகு, இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு ஹர்திக் பாண்டியாதான் கேப்டனாக இருப்பார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக, கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp