அதிரடியாக கைது செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் சகோதரர்... காரணம் இதுதான்!
ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழில் செய்து வரும் நிலையில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியாவும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்காக க்ருனால் பாண்டியாவும் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழில் செய்து வரும் நிலையில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
2021ல் நிறுவன் ஒன்றை துவங்கியதுடன், அதில், ஹர்திக் பாண்டியா 40 சதவீத முதலீடும், க்ருனால் பாண்டியா 40 சதவீத முதலீடும் செய்துள்ளனர்.
மேலும், இவர்களின் சித்தி பையன் வைபவ் பாண்டியாவும் 20 சதவீதம் முதலீடு செய்துள்ளார்.
ஹர்திக்கும், க்ருனாலும் கிரிக்கெட்டில் பிசியாக இருப்பதால், இந்த நிறுவனத்தை வைபவ் பாண்டியாதான், பொறுப்பு ஏற்று கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் 4.30 கோடியை கையாடல் செய்துவிட்டதாக ஹர்திக், க்ருனால் இருவரும் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், இவர்களின் சித்தி பையனான வைபவ் பாண்டியாவை, தற்போது மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல், நிறுவனத்தின் ரகசிய திட்டங்களை தெரிந்துகொண்டு, கையாடல் செய்த பணத்தில் இதேபோல் மற்றொரு நிறுவனத்தை துவங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை முழுவதுமாக ஈர்த்து, பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியதால்தான், ஹர்திக்கும், க்ருனாலும் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ஹர்திக் பாண்டியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தொழிலிலும் அவருக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.