தினேஷ் கார்த்திக் செய்த ஒரே ஒரு தவறு... உலக கோப்பை அணியில் இடம் போச்சு...!
களத்தின் நிலையை புரிந்து கொள்ளாமல் தினேஷ் கார்த்திக் நடந்து கொள்வதால் அவரை நம்பி இந்திய அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில், கேகேஆர், ஆர் சி பி அணிக்கு இடையிலான போட்டியில் தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தாலும் மற்ற மூன்று பந்துகளில் சிங்கிள்ஸ் ஓடாமல் கரன் சர்மாவுக்கு பேட்டிங் தராமல் நின்றார்.
சிங்கிள்ஸ் ஓடாமல் நின்றிருந்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு நெருக்கடியும் ஏற்பட்டு கடைசி பந்தில் அவரும் ஆட்டம் இழக்கும் நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது, யாருமே எதிர்பார்க்காத வகையில் கரன்சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. எனினும் கே கே ஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கரன் ஷர்மாவுக்கு 19 வது ஓவரிலே தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கொடுத்திருந்தால் ஆர் சி பி அணி வெற்றி பெற்றிருக்கும். இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் செய்த தவறு தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
இப்படி களத்தின் நிலையை புரிந்து கொள்ளாமல் தினேஷ் கார்த்திக் நடந்து கொள்வதால் அவரை நம்பி இந்திய அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இவ்வளவு சிறப்பாக விளையாடும் தினேஷ் கார்த்திக் நேற்றைய ஆட்டத்தில் செய்த ஒரே தவறால் அவருடைய வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.