‘நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது’

இதயும் பாருங்க

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

முஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...

இராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தாயர். நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன்.” என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்தார்.

பதுளையில் இன்று நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்குவேன் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன். அரசியல் ஆட்சி அதிகாரம் என்பது தற்காலிகமான ஒன்று என்பதை அனைத்து ஆட்சியாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாடு முன்னேற்றமடைய வேண்டுமென்றால், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்முயற்சிகள் வலுப்படுத்தப்படவேண்டும். அவர்கள்தான் பொருளாதார முன்னேற்றத்தின் வலுவான இயந்திரங்கள். எமது நாட்டின் பொருளாதார எஞ்சின்களை வலுப்படுத்தி நாம் முன்னேறி செல்லவேண்டும். இளைஞர்களிடம் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவோம்.

நாம் தேசிய பாதுகாப்பினை நிச்சயமாக உறுதிப்படுத்துவோம். தேசிய பாதுகாப்பு எனும்போது, பாதுகாப்பு படையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 30 வருட யுத்தத்தை வெற்றிக்கொள்ள தம்மை அர்ப்பணித்த பாதுகாப்பு படை வீரர்களின் அபிவிருத்திக்கு நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்குவோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் நிச்சயமாக மலையக மக்களை பாதுகாப்போம்.

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை நாங்கள் முற்றாக ஒழிப்போம். சிங்கள – பௌத்த தலைவர்கள் என்ற ரீதியில் நாங்கள் புத்த பகவானின் போதனைகளுக்கு மதிப்பளித்து இன, மத, மொழி, பேதங்கள் பாராது நாட்டு மக்கள் அனைவரையும் சமமான விதத்தில் நடத்தவேண்டும்.

நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ, சொத்துகளுக்கோ பாதிப்பினை ஏற்படுத்தும் எந்தவிதமாக பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கையெழுத்திடவில்லை. அரச சேவையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எமது பயணத்தில் அனைத்தையும் விட நாங்கள் மனிதத்துக்கு முதலிடம் வழங்குவோம்.

உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை என் உயிரிலும் அதிகமான மதித்து காப்பாற்றுவேன். எனக்கு பயமில்லை. நான் அச்சப்படுபவன் கிடையாது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்க தாயர். எனக்கு 52 வயதாகிவிட்டது. நான் மரணத்தை கண்டு அச்சமடைபவன் கிடையாது. எனது, தந்தையை போல நடு வீதியில் மக்களுக்காக உயிரை விடுவதற்கும் தயாராக உள்ளேன்.” என்றார்.

இது புதுசு

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...

இனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா?

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...

தெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...

கவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்!

பிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...

நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...

More Articles Like This