அந்த மாதிரி கதாபாத்திரம் - அடம்பிடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

அந்த மாதிரி கதாபாத்திரம் - அடம்பிடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 

இவர் தெலுங்கில் ‘ஜெர்சி’, மலையாளத்தில் ‘ஆராட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக இறுகப்பற்று  படத்தில் நடித்திருந்தார்.

படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் நிலையில். அடுத்ததாக பல படங்களில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் கமிட் ஆகி வருகிறார்.  

இதற்கிடையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர் தான் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என  மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” சில நடிகைகள் பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் சிறிய நடிகர்களின் படங்களில் காதல் காட்சி இருந்தாலும் அதில் தயங்கமால் நடித்து விடுகிறார்கள். 

ஆனால், எனக்கு ஹீரோவுடன் ரோமன்ஸ் செய்யும் படங்கள் எல்லாம் செட் ஆகாது என்ற காரணத்தால் அந்த மாதிரி கதாபாத்திரம் கொண்ட படங்கள் வந்தாலும் அதில் இருந்து விலகியே நிற்கிறேன். பல முறை அந்த மாதிரி கதாபாத்திரம் கொண்ட படங்களும் எனக்கு வந்திருக்கிறது.

நான் நடிக்கவில்லை என மறுக்கவும் செய்துஇருக்கிறேன். படத்தின் கதைக்கு ஏற்றது போல ஒரு நல்ல கதாபாத்திரம் கொண்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க மட்டுமே எனக்கு ஆசை. 

இதுவரை என்னுடைய கதாபாத்திரம் தெரியும் நல்ல படங்களை மட்டுமே நான் தேர்வு செய்து நடித்திருப்பதாக உணர்கிறேன். இனிமேலும் அந்த மாதிரி எனக்கு பிடித்து என்னுடைய கதாபாத்திரம் தெரியும் அளவிற்கு கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன்.

மற்றபடி, ஒரு படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ஓப்புக்கொண்டு அவருடன் காதல் காட்சிகளில் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக தமிழில் “கலியுகம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் ஹிந்தியில் “திரு கண்ணாவிற்கு கடிதங்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp