பாகிஸ்தான் வீரர்கள் உட்பட 4 பேருக்கு வைரஸ் தொற்று.. மொத்த அணிக்கும் பயிற்சி ரத்து

பாகிஸ்தான் அணி நேற்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்கள் உட்பட 4 பேருக்கு வைரஸ் தொற்று.. மொத்த அணிக்கும் பயிற்சி ரத்து

2023 உலகக்கோப்பை தொடரில் ஆடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பெங்களூரில் அடுத்த போட்டியில் ஆட உள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை.

பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவலின் படி பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் பாக்கர் ஜமான் ஆகிய நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூர் கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. அக்டோபர் 20 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி நேற்று (அக்டோபர் 17) பயிற்சியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் பெங்களூர் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அப்துல்லா ஷபிக் அந்த அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். சமீபத்தில் தான் ஷபிக் அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் வீரர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் இருக்கிறது.

இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், சில வீரர்களுக்கு கடந்த சில நாட்களில் காய்ச்சல் இருந்தது உண்மைதான். ஆனால், அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அனைவரும் உடல்நலம் தேறி உள்ளனர். விரைவில் அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் நிலையை எட்டுவார்கள் என கூறி இருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...