இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. 2 வீரர்கள் அவுட்.. ஷமி, சூர்யகுமார் உள்ளே

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. 2 வீரர்கள் அவுட்.. ஷமி, சூர்யகுமார் உள்ளே

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவே வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரர் என இந்திய அணியில் யாரும் இல்லை.

ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சிலும் அணிக்கு கை கொடுப்பார். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தன் அதிரடி ஆட்டம் மூலமும் கை கொடுப்பார். இப்படி ஒரு தனித்துவமான ஆல் - ரவுண்டரை இழந்த இந்திய அணி, அதை ஈடுகட்ட இரண்டு வீரர்களை அணியில் சேர்க்க உள்ளது.

ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்யும் இடத்திற்கு அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கை ஈடு கட்ட மட்டுமே சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படுகிறார்.

பந்துவீச்சில் பாண்டியாவை ஈடுகட்ட முகமது ஷமியை சேர்க்க உள்ளது இந்திய அணி. ஆனால், ஷமி சேர்க்கப்பட வேண்டும் என்றால் ஒருவரை நீக்க வேண்டும். எனவே, ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷமி அணியில் இடம் பெறுவார்.

ஷர்துல் தாக்குர் பேட்டிங் ஆல் - ரவுண்டர் தான் என்றாலும் அவர் பேட்டிங்கில் எந்த அளவுக்கு செயல்படுவர் என்பது தெரியாது. அவரின் வேகப் பந்துவீச்சும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, அனுபவம் வாய்ந்த ஷமி வலுவான நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடுவது உறுதி.

முடிவாக, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி சேர்க்கப்படுவார்கள். 

இதில் ஒரே ஒரு சிக்கல் உள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு வலை பயிற்சியின் போது கையில் பந்து பட்டு லேசான காயம் ஏற்பட்டது. அது சாதாரணமானது என்றால், அவர் நிச்சயம் இந்தப் போட்டியில் ஆடுவார். அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் இஷான் கிஷன் சேர்க்கப்படுவார்.

இந்திய அணி பிளேயிங் 11 :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் / இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp