யாருப்பா நீ? விராட் கோலிக்கு வந்த சோதனை.. நிம்மதியை கெடுத்த இலங்கை வீரர்
உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே, இளம் வீரரான நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா, ரோஹித் சர்மா, விராட் கோலியை விட அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அதிகம் அறியப்படாத இலங்கையின் சதீரா சமரவிக்ரமா விராட் கோலியை முந்தி தன் பெயரை நிலை நாட்ட துடித்து வருகிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் குவித்த வீரராக இருப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் சற்று பின் தங்கியே இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் டக் அவுட் ஆனது தான்.
தற்போது உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா ஆறு போட்டிகளை ஆடி முடித்துள்ள நிலையில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் டி காக் 431 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
டேவிட் வார்னர் 413 ரன்கள், ரச்சின் ரவீந்திரா 406 ரன்கள், ரோஹித் சர்மா 398 ரன்கள், எய்டன் மார்கிரம் 356 ரன்கள் எடுத்து முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.
விராட் கோலி 354 ரன்கள் எடுத்து ஆறாவது இடத்தில் இருக்கிறார். சதீரா சமரவிக்ரமா 331 ரன்கள் எடுத்து எட்டாவது இடத்துக்கு தாவி இருக்கிறார். அடுத்த ஒன்று, இரண்டு போட்டிகளில் அவர் விராட் கோலியை முந்த வாய்ப்பு உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், விராட் கோலியை விட அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் அவரை விட அதிக பவுண்டரி, அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் சதீரா சமரவிக்ரமா.
ஆறு உலகக்கோப்பை லீக் போட்டிகளின் முடிவில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 88.5 மட்டுமே. சதீரா சமரவிக்ரமாவின் ஸ்ட்ரைக் ரேட் 104.41 ஆகும்.
அதே போல, சதீரா சமரவிக்ரமா 32 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்துள்ளார். விராட் கோலி 29 ஃபோர், 6 சிக்ஸ் அடித்துள்ளார். மொத்தமாக விராட் கோலி 35 பவுண்டரி அடித்துள்ள நிலையில், சதீரா சமரவிக்ரமா 36 பவுண்டரி அடித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று தள்ளாடும் நிலையில், 29 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள சதீரா சமரவிக்ரமா, விராட் கோலிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.