இலங்கை எதிர்பார்க்காததை செய்த நெதர்லாந்து.. என்னப்பா... செம மேட்ச்
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது.
ஆனால், 49.4 ஓவர் வரை தாக்குப் பிடித்து ஆடி 262 ரன்கள் குவித்தது அந்த அணி.
இது எப்படி சாத்தியம்? இதற்கு காரணமே, நெதர்லாந்து அணியில் 10வது பேட்ஸ்மேன் வரை ரன் குவிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது தான்.
மேலும், மற்ற அணிகளில் துவக்க வீரர்கள் அதிக ரன் குவிப்பார்கள், அதற்கு அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிப்பார்கள்.
ஆனால், நெதர்லாந்து அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் ஏழு, எட்டு, ஒன்பதாவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்களால் ரன் குவித்து வருகிறது. அதாவது, அந்த அணியின் பேட்டிங் வரிசை தலைகீழாக இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது.
முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் கோலின் ஆக்கர்மேன் எடுத்த 29 ரன்கள் தான் அதிகம். ஒரு கட்டத்தில் 91 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது நெதர்லாந்து.
அந்த அணி 150 ரன்களை தாண்டுவதே கடினம் என கருதப்பட்ட நிலையில், ஏழாவது மற்றும் எட்டாவது பேட்ஸ்மேன்களான சைபிரன்ட் மற்றும் லோகன் வான் பீக் கூட்டணி அமைத்து ரன் குவித்தனர்.
சைபிரன்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து அணி தாக்குப் பிடித்து ஆடி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 262 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியின் மதுசங்கா மற்றும் ரஜிதா தலா 4 விக்கெட்கள் வீழ்த்தினர். தீக்ஷனா 1 விக்கெட் சாய்த்தார். இலங்கை அணி 6 விக்கெட் வீழ்த்திய உடன் போட்டி நம் கையில் என தப்புக் கணக்கு போட்டதே அந்த அணிக்கு பின்னடைவாக மாறியது. இலங்கை அணிக்கு 263 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.