கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை... பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் சேட்டை!

பொதுவாக பேட்ஸ்மேன்களிடம் போய் யாரும் நீங்கள் அவுட்டா? இல்லையா? எனக் கேட்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தான் அவுட் என ஒப்புக் கொண்டு சென்று விட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு அம்பயர்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை... பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் சேட்டை!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மீண்டும் ஒரு விசித்திரமான செயலை செய்து இருக்கிறார்.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் இடையேயான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் எடுத்து இருந்தது. 

43வது ஓவரை வீச வந்தார் ஷஹீன் ஷா அப்ரிடி ஏற்கனவே, மூன்று விக்கெட்களை சாய்த்து இருந்த அவர் இந்த ஓவரில் ஒரு பின்வரிசை பேட்ஸ்மேனையாவது வீழ்த்தி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மத் அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். பந்து அவர் காலில் இருந்த பேடில் உரசிச் சென்றது. விக்கெட் கீப்பர் ரிஸ்வான் பந்தை கேட்ச் பிடித்தார். உடனே எல்பிடபுள்யூ அவுட் கேட்டார் ஷஹீன் ஷா அப்ரிடி. ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார்.

அப்போது ஷஹீன் ஷா அப்ரிடி அருகில் இருந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் இது அவுட்டா? எனக் கேட்டார். ரிஸ்வான் தனக்கு சரியாக தெரியவில்லை எனக் கூறினார். 

பந்து காலில் பட்டதா அல்லது பேட்டில் பட்டு கேட்ச் ஆனதா என்ற குழப்பத்தில் இருந்த ரிஸ்வான், இன்னும் சில வினாடிகளில் டிஆர்எஸ் கேட்கும் நேரம் முடிந்து விடும் என்பதால் பேட்ஸ்மேன் இடமே பந்து பேடில் பட்டதா, இல்லையா? எனக் கேட்டார்.

பொதுவாக பேட்ஸ்மேன்களிடம் போய் யாரும் நீங்கள் அவுட்டா? இல்லையா? எனக் கேட்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தான் அவுட் என ஒப்புக் கொண்டு சென்று விட்டால், ஒவ்வொரு போட்டிக்கும் நான்கு அம்பயர்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

அதனால், கிரிக்கெட்டில் ரிவ்யூ கேட்கும் முறை வரும் முன்போ அல்லது வந்த பின்போ, எப்போதும் பந்து காலில் பட்டதா, பேட்டில் பட்டதா என்றெல்லாம் எந்த வீரரும் கேள்வி கேட்டதாக நினைவில் இல்லை. ஒரு வீரர் அவுட்டா இல்லையா என அவரிடமே கேட்ட ஒரே வீரர் முகமது ரிஸ்வான் மட்டுமே.

ஆனால், முகமது ரிஸ்வான் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் போல அவுட்டா எனக் கேட்டு ரசிகர்களை அதிர வைத்தார். பலரும் ரிஸ்வான் இப்படி கேட்டதை கிண்டல் செய்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp