இந்திய அணி ஏமாற்று வேலை செய்கிறது.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு

புரிந்து கொள்ளாமல் ஹசன் ராசா ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இந்திய அணி ஏமாற்று வேலை செய்கிறது.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணிக்கு போட்டிகளில் அளிக்கப்படும் பந்தில் ஏமாற்று வேலை இருப்பதாகவும், இதன் பின்னணியில் ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இருக்கலாம் எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இந்திய அணிக்கு மட்டும் தனியாக குறிப்பிட்ட பந்துகள் கொடுக்கப்படுவதாகவும், அதனால் தான் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்தை ஸீம் மற்றும் ஸ்விங் செய்து விக்கெட் வீழ்த்துவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

அவரது இந்த புகார் குறித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், இதெல்லாம் சாத்தியமே இல்லை என ரசிகர்கள் பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர். முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவும் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வேகப் பந்துவீச்சில் கலக்கி வருகிறது. பும்ரா 15 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். ஷமி மூன்றே போட்டிகளில் 14 விக்கெட்கள் எடுத்து இருக்கிறார். 

இது மட்டுமின்றி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சிராஜ் ஏழு பந்துகளில் மூன்று விக்கெட்களை சாய்த்தார். ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

எப்போதும் புதிய பந்தில் வீசும் போது ஸ்விங் செய்ய முடியும். அதனால் விக்கெட் வீழ்த்த முடியும். சிராஜ் அதில் கை தேர்ந்தவராக இருக்கிறார். ஷமி எந்த சூழ்நிலையிலும் ஸீம் மூவ்மென்ட் மூலம் விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்று இருக்கிறார். 

அதனால், அவர்கள் இலங்கை போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், அதை புரிந்து கொள்ளாமல் ஹசன் ராசா ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

"ஷமி, சிராஜ் போன்ற பந்துவீச்சாளர்கள் ஆலன் டொனால்டு, மக்காயா நிடினி போன்ற பந்துவீச்சாளர்களை போல வீசுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் மற்ற அணிகளுக்கு எதிராக ஆடுவது வேறு மாதிரி உள்ளது. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

பந்து ஸீம் மற்றும் ஸ்விங் ஆனது. பந்தில் ஒரு பக்கம் பளபளவென்று இருந்தது (இது ஸ்விங் ஆக உதவும்). இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு முறை பந்து மாற்றப்பட்டது. ஐசிசி, பிசிசிஐ மற்றும் மூன்றாவது அம்பயர் இந்த பந்தை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை நாம் விசாரிக்க வேண்டும்." என்றார் ஹசன் ராசா.

இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "இது உண்மையிலேயே கிரிக்கெட் நிகழ்ச்சி தானா? அப்படி இல்லை என்றால் தயவு செய்து, "காமெடி நிகழ்ச்சி" "நையாண்டி நிகழ்ச்சி" என முன்பே கூறுங்கள்." எனக் கூறி இருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp