கோலியின் கடைசி உலகக்கோப்பை இதுதான்.. ரிக்கி பாண்டிங் வெளியிட்ட தகவல்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

கோலியின் கடைசி உலகக்கோப்பை  இதுதான்.. ரிக்கி பாண்டிங் வெளியிட்ட தகவல்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

மேலும், அவர் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் அடித்த சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கோலி அதை சமன் செய்யலாம், முறியடிப்பது சந்தேகம் என்பது போலவே பதில் கூறி இருக்கிறார்.

இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாக தன் சிறப்பான ஆட்டத்தை ஆடுவதில்லை என்ற விமர்சனம் உள்ளது. 

அவர் இப்போது போட்டிகளில் எடுக்கும் ரன்கள் மோசம் இல்லை என்றாலும் 2016 முதல் 2019 வரை விராட் கோலி தன் உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அப்போதெல்லாம் அவர் அடிக்கடி சதம் அடித்து வந்தார்.

அதனால், அவர் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதம் அடித்த சாதனையை அடுத்த இரண்டு - மூன்று வருடங்களில் எல்லாம் முறியடித்து விடுவார் என கூறப்பட்டது. 

ஆனால், அவர் 2020க்கு பின் அவரது பழைய ஃபார்மை தொடரவில்லை. அவரால் அணிக்கு இழப்பு இல்லை என்றாலும், அவரது தனிப்பட்ட சாதனைகளை அவரால் தொடரம் முடியவில்லை.

அவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்த நிலையில், 2023 உலகக்கோப்பை தொடரே அவரின் கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கலாம். அதனால், அவர் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் 49 சதங்கள் அடித்த சாதனையை முறியடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது விராட் கோலி 47 ஒருநாள் போட்டி சதங்களை அடித்துள்ளார். இன்னும் மூன்று சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்து விடுவார். 

இது குறித்து தன் கருத்தை தெரிவித்த ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். இந்த உலகக்கோப்பையின் முடிவில் அவர் சச்சின் சாதனையை சமன் செய்யவோ, அல்லது முறியடிக்கவோ வாய்ப்பு உள்ளது. ஆனால் உறுதியாக கூற முடியாது என்றார்.

தற்போது கிரிக்கெட் அணிகள் பலவும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதை குறைத்துக் கொண்டன. பல அணிகளும் டி20 தொடரில் ஆடுவதோடு நிறுத்திக் கொள்கின்றன. 

இந்த நிலையிலம் இனி விராட் கோலியும் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆட முடியாது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தான் அதிக போட்டிகளில் ஆட முடியும். அதனால் அவர் தனது சாதனையை விரைவில் செய்து முடிக்க வேண்டும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp