ராகுல் டிராவிட் சத்தமே இல்லாமல்  செய்த ட்ரிக்.. இந்தியாவின் வெற்றிக்கு அதுதான் காரணமே!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் தடுமாறி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராகுல் டிராவிட் சத்தமே இல்லாமல்  செய்த ட்ரிக்.. இந்தியாவின் வெற்றிக்கு அதுதான் காரணமே!

இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திய நிலையில், அதன் பின்னணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டம் போட்டு செய்த ஒரு விஷயம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் தடுமாறி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அப்போது பலரும் இந்திய அணியால் இந்த குறைவான ஸ்கோரை அடித்து விட்டு வெற்றி பெற முடியாது என நினைத்தனர். 

ஆனால், இங்கிலாந்து அணியை 129 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வெற்றிக்கு வீரர்களின் திறமை, செயல்பாடு மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி என பல முக்கிய காரணங்கள் இருந்தாலும், இந்த போட்டி இப்படி தான் நடக்க வேண்டும் என திட்டம் போட்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிட்ச்சில் செய்த மாற்றமே வெற்றிக்கு முதல் அச்சாணி என்று சொல்லலாம்.

இந்தியா - இங்கிலாந்து போட்டி நடந்த லக்னோ ஆடுகளம் பொதுவாக பேட்டிங் செய்யவும், சுழற் பந்துவீச்சுக்கும் சாதகமான பிட்ச். ஆனால், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்டிக்கு சில நாட்கள் முன்னதாக இந்திய அணி லக்னோ சென்றடைந்த உடனேயே பிட்ச்சை பார்வையிட சென்றார்.

அப்போது பிட்ச்சில் அதிக புற்கள் இருந்தது. அப்படி இருந்தால் வேகப் பந்துவீச்சுக்கும் பேட்டிங் செய்யவும் சாதகமான சூழல் இருக்கும். இங்கிலாந்து அணியில் அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். 

அதனால், பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கக் கூடாது என முடிவு எடுத்த அவர் பந்துவீச்சாளர்கள் அதிகம் பிட்ச் செய்யும் குட் லென்த் பகுதியில் இருந்த புற்களை அகற்றுமாறு கோரினார். அதனால், பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக மாறியது.

அதனால் தான் இந்திய அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்ததால் இங்கிலாந்து அணியால் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவே முடியாமல் திணறினர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி டிராவிட் செய்த பிட்ச் மாற்றம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...