அம்பயர் முன் திடீரென கையை மடக்கி காண்பித்த ரோகித்.. நடந்தது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் அம்பயர் முன் திடீரென ரோகித் சர்மா தன் கையை மடக்கி பலம் காண்பித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் அம்பயர் முன் திடீரென ரோகித் சர்மா தன் கையை மடக்கி பலம் காண்பித்தார்.
அது ஏன் என தெரியாமல் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பிய நிலையில், ரோகித் சர்மா என்ன நடந்தது என போட்டிக்கு பின் நடந்த உரையாடலில் ஹர்திக் பாண்டியாவிடம் கூறி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சர்வ சாதாரணமாக ஆறு சிக்ஸர்களை அடித்தார்.
விரைவாக அரைசதம் அடித்த ரோகித், 63 பந்துகளில் 86 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அருகே கொண்டு வந்த பின்னரே ஆட்டமிழந்து சென்றார்.
அவர் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சில் சாதாரணமாக சிக்ஸர்களை பறக்க விட்டுக் கொண்டு இருந்தார்.
அவர் கஷ்டப்பட்டு அந்த சிக்ஸர்களை அடிப்பது போலவே இல்லை. லேசாக பந்தை தட்டிய உடன் அது பவுண்டரி எல்லையை தாண்டி செல்வது போல தோன்றியது.
ரசிகர்களுக்கு தோன்றிய இதே விஷயம் எதிரில் நின்று பார்த்துக் கொண்டு இருந்த அம்பயருக்கும் தோன்றி இருக்கிறது.
அவர் உடனே ரோகித் சர்மாவிடம் "நீங்கள் எப்படி இவ்வளவு எளிதாக சிக்ஸ் அடிக்கிறீர்கள்? உங்கள் பேட் தான் காரணமா?" என கேட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் அளிக்கும் போது ரோகித் சர்மா தன் கையை மடக்கி காட்டி, "அதற்கு காரணம் என் பேட் இல்லை. என் பலம் தான்" எனக் கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியாவிடம் கூறினார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி 192 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக சேஸ் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இது இந்திய அணியின் மூன்றாவது வெற்றி ஆகும். மேலும், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மூன்று வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.