டிராவிஸ் ஹெட்டா,  முகமது ஷமியா நவம்பர் மாத சிறந்த வீரர்? வெளியான அறிவிப்பு!

நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட் வென்று இருப்பதாக தற்போது ஐசிசி அறிவித்துள்ளது.

டிராவிஸ் ஹெட்டா,  முகமது ஷமியா நவம்பர் மாத சிறந்த வீரர்? வெளியான அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஐ சி சி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் இறுதி கட்ட போட்டிகள் கடந்ம நவம்பர் மாதம் நடைபெற்றது.இதனால் யார் சிறந்த வீரருக்கான விருதை வாங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட் வென்று இருப்பதாக தற்போது ஐசிசி அறிவித்துள்ளது.

இதற்காக மூன்று வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். அதில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய முகமது சமி இடம் பெற்றிருந்தார். 
இதேபோன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்திய மேக்ஸ்வெலும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தார். மேலும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டும் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருந்தார். 

இந்த வருடம் மக்களால் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? ஷாக் ஆகாதிங்க!

இந்த நிலையில் இந்த நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதை வென்றவர் யார் என்பது குறித்து ஐசிசி தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதன்படி டிராவிஸ் ஹெட் இந்த விருதை வென்று இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அரை இறுதியில் தொடர்ந்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய டிராவிஸ் ஹெட்,  48 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். இதேபோன்று இறுதி ஆட்டத்தில் 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்ததுடன், அபாரமான ஒரு கேட்சையும் பிடித்தார்.

இதன் மூலம் ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை  டிராவிஸ் ஹெட்  கைப்பற்றியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp