இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.. டி20 உலககோப்பை உத்தேச வீரர்கள் பட்டியல் இதோ... 

இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.. டி20 உலககோப்பை உத்தேச வீரர்கள் பட்டியல் இதோ... 

20 அணிகள் பங்கேற்கும் 2024 ஆண்டுக்கான டி20உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இந்திய அணி கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெற்றிப்பெறாத நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியலை தேர்வு குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீரர்களை ஐபிஎல் தொடரில் கண்காணித்து 15 பேர் கொண்ட அணியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தேச அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ஜடேஜா, கே.எல் ராகுலும் இடம்பெற்று உள்ளனர். 

இதேபோன்று ஹர்திக் பாண்டியா, முஹமது சிராஜ் போன்ற வீரர்களும் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். ரிஷப் பந்தின் பெயரும் உத்தேச பட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:  கடைசி டெஸ்டில் ஓய்வு பெறும் ரோஹித்? புதிய கேப்டன் இவர்தான்.. பிசிசிஜயின் அதிரடி திட்டம் இதுதான்!

தற்போது காயத்தில் இருக்கும் சூரிய குமார் யாதவ் இந்த உத்தேச பட்டியலில் இருக்கிறார். ஜெய்ஸ்வால், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவும் இந்த பட்டியலில் உள்ளனர்.

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சர்துல் தாக்கூர்,சிவம் துபே, ரவி பிஸ்னாய், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, உத்தேச பட்டியலில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp