இதுதான் கடைசி டி20 உலகக்கோப்பை... 11 ஆண்டுகள் கனவை நிறைவேற்றுவாரா ரோகித்?

2007 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் விளையாடி வரும் ஒரே இந்திய வீரரான ரோகித் சர்மாவின் டி20 உலகக்கோப்பை பயணத்தை பார்க்கலாம்.

இதுதான் கடைசி டி20 உலகக்கோப்பை... 11 ஆண்டுகள் கனவை நிறைவேற்றுவாரா ரோகித்?

2007 டி20 உலகக்கோப்பை தொடர் முதல் விளையாடி வரும் ஒரே இந்திய வீரரான ரோகித் சர்மாவின் டி20 உலகக்கோப்பை பயணத்தை பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை ஜூன் 1ஆம் தேதி தொடங்கி நடக்கவுள்ளது. இதுவரை நடைபெற்ற 9 டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் ரோகித் சர்மா தான். 

இதுவரை மொத்தமாக 36 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 963 ரன்களை விளாசியுள்ளதுடன், டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார்.

2007 டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ரோகித் சர்மா ஒரு அரைசதம் உட்பட 88 ரன்களை விளாசினார். இறுதிப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரோகித், 16 பந்துகளில் 30 ரன்களை விளாசி இருந்தார்.

2009 டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். 2010 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா 46 பந்துகளில் 79 ரன்களை விளாசினார்.

2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 200 ரன்களை விளாசியதுடன், 2016ஆம் ஆண்டும் ரோகித் சர்மா2 அரைசதங்களை பெற்றிருந்தொர்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ரோகித் சர்மாவுக்கு மோசமாக இருந்ததுடன், 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்த சீசனில் அரையிறுதிக்கு இந்திய அணியை அழைத்து சென்ற ரோகித், 6 போட்டிகளில் விளையாடி 116 ரன்களை சேர்த்தார்.

தற்போது, 37 வயதாகும் ரோகித் சர்மா கடைசி முறையாக டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார்.

கடந்த ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை வென்று ரசிகர்களுக்கு விருதளிக்க வேண்டும் என்பதில் ரோகித் சர்மா தீவிரமாக இருக்கிறார். 

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp