டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே அதிரடியாக வெற்றி பெற்ற அணி

காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே அதிரடியாக வெற்றி பெற்ற அணி

காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

இதன்படி, அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ல் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது மலேசியாவில் நடந்து வருகிறது.

ஆசிய மண்டல தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாக மலேசியாவின் பாங்கி நகரில் நடந்த ஒரு ஆட்டத்தில் சிங்கப்பூர் - மங்கோலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த மங்கோலியா அணி, சிங்கப்பூரின் அதிரடியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தள்ளாடியது. 


மங்கோலிய அணியின் வீரர்கள் ஒருவருக்கொருவர் அதிவேகமாக பெவிலியன் திரும்பியதால், அந்த அணி 10 ஓவர்களே மட்டுமே தாக்குப்பிடித்து 10 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதன்மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்னுக்கு சுருண்ட அணி என்ற மோசமான சாதனையை மங்கோலியா அணியானது கைப்பற்றியது.

சிங்கப்பூர் தரப்பில், பரத்வாஜ் சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்களில் 3 ரன்னையே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது அபாரமான பந்துவீச்சால், மங்கோலிய வீரர்கள் சோர்ந்து போயினர்.

இதனைத் தொடர்ந்து, 11 ரன்னின் இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணி வெறும் 5 பந்துகளிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் வெற்றி பெற்ற ஆட்டமாகவும், குறைந்த ரன்னுக்கு ஆல் அவுட்டான அணியாகவும் நினைவுகொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...