டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஐசிசி வெளியிட்ட டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, 5- டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி முடிந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேபோல், ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
முதல் போட்டியில் தோற்றாலும் இந்தியா தான் தொடரை வெல்லும்.. சொன்னது யார் தெரியுமா?
இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இடம்பெற வில்லை. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் 864 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
அதேபோல், இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 832 புள்ளிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மீத் 818 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளனர். கடந்த முறை 5 வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
அவர் எடுத்திருக்கும் புள்ளி 786 ஆகும். இதில் முக்கியமாக கடந்த முறை 10-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம் 5 இடங்கள் முன்னேறி 768 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப்- 5 வீரர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
அதேநேரம், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி 7-வது இடத்தில் இருந்து 767 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரோகித் சர்மா 11 வது இடத்தில் இருந்து 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட் 13 வது இடத்தில் இருக்கிறார்.