ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னிலை... டாப் 5க்குள் வந்த ரோஹித்.. கோலி முன்னேற்றம்!

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னிலை... டாப் 5க்குள் வந்த ரோஹித்.. கோலி முன்னேற்றம்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளதுடன்,  நட்சத்திர வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

கேப்டன் தனஞ்செய டி சில்வா, நிசாங்க, லஹிரு குமார, ரத்னநாயக, மேத்யூஸ் உள்ளிட்ட பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர இளம் வீரர் ஹாரி ப்ரூக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்துள்ளார். 

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், நம்பர் 5ல் இருந்த ஹாரி ப்ரூக் 7 இடங்கள் சரிந்து 12வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, 6வது இடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5வது இடத்துக்கும் 7வது இடத்தில் இருந்த இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6வது இடத்திற்கும், 8வது இடத்தில் இருந்த விராட் கோலி 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். 

நம்பர் 1 இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்தும் உள்ளதுடன், இலங்கை வீரர்களான தனஞ்செயா டி சில்வா 3 இடங்கள் முன்னேறி 13வது இடத்திற்கும், கமிந்து மெண்டிஸ் 6 இடங்கள் முன்னேறி 19வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். அத்துடன், பாகிஸ்தானின் பாபர் அசாம் 11 ஆவது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் தொடர்வதுடன், 2வது இடத்தை பும்ராவும், ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட்டும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 7வது இடத்திலும், குல்தீப் யாதவ் 15வது இடத்திலும் தொடர்ந்து வருகின்ற நிலையில், இந்திய அணியின் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் 3 பவுலர்கள் டாப் 10 வரிசைக்குள் இடம்பிடித்திருக்கின்றனர். 

இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிலும் விராட் கோலியின் ஆட்டம் வேறு லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர். வங்கதேசம் டெஸ்ட் தொடரை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடனான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp