அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸிக்கு வாய்ப்பு இருக்கா? எத்தனை வெற்றி தேவை?

ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸிக்கு வாய்ப்பு இருக்கா? எத்தனை வெற்றி தேவை?

ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. 

இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது லீக் ஆட்டங்களில் விளையாடும். இதில் அதிக புள்ளிகளை பெறும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும். 

தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரு பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொண்டு தான் தோல்வியை தழுவி இருக்கிறது.

இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு 8 லீக் ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய பலம் ஒன்றிய ஆணிகளுடன் எதிர்கொள்ளும் இதில் மூன்றிலும் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. 

இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி மைதானத்தின் நிலை என்ன? யாருக்கு வாய்ப்பு அதிகம்!

அதன் பிறகு பலமான அணிகள் என்று பார்த்தால் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள உள்ளது.

இதில் அதிகபட்சமாக நான்கில் மூன்றில் வெல்ல வேண்டும். உதாரணத்திற்கு இலங்கை பாகிஸ்தான் ஆகிய அணிகளை ஆஸ்திரேலியா வீழ்த்தும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் நியூசிலாந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டிலும் அல்லது ஒன்றிலோ ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். 

நிலைமை இப்படி இருக்க ஆஸ்திரேலிய அணி தங்களது தவறுகளை திருத்திக் கொண்டு விளையாடினால் நிச்சயம் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் எஞ்சியுள்ள ஆறு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் ஆவது வெல்ல வேண்டும். 

ஆஸ்திரேலியா அணியை இப்படி குறைத்து மதிப்பிட முடியாது. அதேசமயம் இந்த அழகில் ஆஸ்திரேலியா விளையாடினால் அரை இறுதிக்கு செல்லாமலே வீடு திரும்புவது நல்லது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp