உலககோப்பை முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்து சம்பவம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டிம் சவுதி, இஸ் சோதி லோகி ஃபெகுர்சன் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்கள். எனினும் நியூசிலாந்து அணி கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் களத்தில் சாம்பியன் போல் விளையாடினார்கள்.
குறிப்பாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட முற்பட்டனர். ஜானி பாரிஸ்டோ போட்டியில் இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.
எனினும் நியூசிலாந்து அணி வீரர்கள் நேர்த்தியான பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். தொடக்க வீரர் டேவிட் மாலன் 14 ரன்கள் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாட முற்பட்ட பாரிஸ்டோ 33 ரன்களில் வெளியேறினார்.
இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புருக்கும் இணைந்து ரன்களை சேர்க்க முயற்சித்தனர். இதில் ஹாரி குரூப் 25 ரன்களிலும் அடுத்த களம் இறங்கிய மோயின் அலியும் 11 ரன்களிலும் வெளியேறினர்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 77 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்ஸர் உட்பட 43 ரன்கள் சேர்த்தார்.
எனினும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என இருந்த திட்டம் நிறைவேறவில்லை.
இறுதியில் ஆதில் ரசித், கிறிஸ் வோக்ஸ் ஜோடி தங்களது விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
இந்த போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் மாட் ஹென்ரி மூன்று விக்கெட்டுகளையும் மிச்சல் ஷாண்ட்னர், கிளன் பிலிப்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.