இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி மைதானத்தின் நிலை என்ன? யாருக்கு வாய்ப்பு அதிகம்!

இந்த உலகக் கோப்பையில் நடந்த முதல் ஆட்டமே இந்த மைதானத்தில் தான் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி, அந்த இலக்கை 36.2 ஓவர்கள் எல்லாம் வெற்றிகரமாக எட்டியது.

இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி மைதானத்தின் நிலை என்ன? யாருக்கு வாய்ப்பு அதிகம்!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் நாளை நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இது இந்தியாவுக்கு ராசியான மைதானமாகவும் செயல்பட்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா இங்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றது கிடையாது. 
கடைசியாக விளையாடிய நான்கு ஒரு நாள் போட்டிகளில் அகமதாபாத்தில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் நாளைய ஆட்டத்திற்கான ஆளுகளம் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். 

இந்த உலகக் கோப்பையில் நடந்த முதல் ஆட்டமே இந்த மைதானத்தில் தான் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி, அந்த இலக்கை 36.2 ஓவர்கள் எல்லாம் வெற்றிகரமாக எட்டியது.

ஐபிஎல் போட்டிகளில் கூட இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இருந்திருக்கிறது. இதனால் நாளைய போட்டிக்கான ஆடுகளமும் இதே போல் தான் இயங்கும் என தெரிகிறது. 

இதைப் போன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இந்த ஆடுகளத்தில் தங்களுடைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனினும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இந்த ஆடுகளத்தில் அவர்கள் செயல்பட வேண்டும்.

இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர்களும் அதிகளவு ரன்கள் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.ஏனென்றால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால் நாளை ஆட்டத்தில் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம். 

மேலும் கடந்த போட்டியில் மிகப்பெரிய இலக்கை பாகிஸ்தான் வெற்றிகரமாக துரத்தியது. இதனால் அந்த அணியின் பேட்டிங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவது சிறப்பாக இருக்கும். இரண்டாவது பேட்டிங் செய்யும்போது மாலை நேரத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏற்ற சூழலில் இருக்கும். 

ஒருவேளை முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு இருந்தால் முதல் சில ஓவர்களில் பொறுமையாக விளையாடி விட்டு பிறகு அதிரடியை காட்டினால் 350 ரன்களை மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைக்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் விளையாடிய அதே இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp