இறுதி போட்டிக்கு இந்த 3 அணி தான் வரும்.. இவங்களுக்குத்தான் உலக கோப்பை.. அடித்து கூறும் ஜாம்பவான்

அதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் ஜாக் காலிஸ் மூன்று அணிகளுக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இறுதி போட்டிக்கு இந்த 3 அணி தான் வரும்.. இவங்களுக்குத்தான் உலக கோப்பை.. அடித்து கூறும் ஜாம்பவான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி வார லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. ஆனால் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு சென்று விடுவார்கள். 

இந்த நிலையில் எஞ்சிய இரண்டு இடத்தை பிடிக்கப் போகும் அணி எது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல விவாதங்கள் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருந்தாலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் தங்களுடைய வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் அரை இறுதியில் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்கள் பிடிக்கும் அணி முதல் அரையிறுதியிலும், புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் பிடிக்கும் அணி இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோதும்.

அந்த வகையில் தற்போது பல முன்னாள் வீரர்கள் எந்த அணி இறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறித்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். 

அதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் ஜாக் காலிஸ் மூன்று அணிகளுக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இம்முறை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதால் அவர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள காலிஸ் தற்போது வரை இந்தியா சிறப்பாக செயல்பட்டாலும் அரை இறுதியில் புதிய தொடக்கமாகத்தான் அனைத்து அணிகளுக்கும் இருக்கும் என்று கூறினார்.

இதேபோன்று மூன்றாவது அணியாக ஆஸ்திரேலியா அபாயமிக்க அணியாக விளங்குவதாக காலிஸ் சுட்டிக்காட்டி உள்ளார். தொடரின் ஆரம்ப கட்டத்தில் தோல்வியை தழுவினாலும் ஆஸ்திரேலிய அணி தற்போது தரமான கம் பேக்கை கொடுத்து இருப்பதால் இந்தியாவுக்கும் தென்ஆப்பிரிக்காவுக்கும் நிச்சயம் ஆபத்து காத்திருப்பதாக காலிஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp