செய்தியாளரின் சந்திப்பின் போது மின் தடை.. அப்புறம் நடந்தது தான் சம்பவமே!

அச்சச்சோ அவமானமாக போச்சு என இந்திய பத்திரிக்கையாளர்கள் திணறிய நிலையில் நியூசிலாந்து வீரர் இவ்வாறு செய்ததால் அந்த நிகழ்வே காமெடியாக மாறியது.

செய்தியாளரின் சந்திப்பின் போது மின் தடை.. அப்புறம் நடந்தது தான் சம்பவமே!

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. அந்த நிலையில் இந்த தொடரை எவ்வாறு பிரமாண்டமாகவும் உற்சாகமாகவும் நடத்த வேண்டும் ஆனால் செத்தவன் கையில் பாக்கு கொடுத்தது போல், பிசிசிஐ இந்த தொடரை நடத்தி வருகிறது.

குறிப்பாக உலகக்கோப்பை தொடக்கப் போட்டியில் கூட்டமே இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதேபோன்று ஆடுகளம் சரியாக இல்லை என்று தற்போது ஒரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. 

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் தர்மசாலாவில் உள்ள ஆடுகளத்தை குறை கூறிய நிலையில் தற்போது இங்கிலாந்து அணியும் குற்றச்சாட்டி இருக்கிறது. இப்படி பல முன்னேற்பாடு பணிகளை பிசிசிஐ கோட்டை விட்டதாக ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் பிசிசிஐக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு நியூசிலாந்து வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது வீரர்கள் அமர்ந்து கொண்டிருந்த நிலையில் பேட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களும் வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

எனினும் இந்த நிலைமையை நகைச்சுவையாக்கும் வகையில் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் தன்னுடைய செல்போனை எடுத்து லைட்டை வைத்து பிரஸ்மீட்டை தொடங்குமாறு கூறினார்.

அச்சச்சோ அவமானமாக போச்சு என இந்திய பத்திரிக்கையாளர்கள் திணறிய நிலையில் நியூசிலாந்து வீரர் இவ்வாறு செய்ததால் அந்த நிகழ்வே காமெடியாக மாறியது.

இதனை தொடர்ந்து மின்சாரம் சிறிது நேரம் கழித்து வந்தது. இந்த பேட்டியில் பேசிய பிலிப்ஸ், ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் நியூசிலாந்து வீரர்களுக்கு நிச்சயம் கை கொடுப்பதாக தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆடுகளமும் ஒவ்வொரு விதமாக செயல்படுவதாக குறிப்பிட்ட பிலிப்ஸ் அதற்கு ஏற்றார் போல் வீரர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் எந்த அணி மாற்றி கொள்கிறார்களோ அவர்கள் தொடர் வெற்றி பெறுவார்கள் என்று கிளான் பிலிப்ஸ் கூறினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp