அரையிறுதிக்கு வரப்போகும் நான்கு அணிகள்... மற்ற அணிகளுக்கு வாய்ப்பு குறைவு.. ஏன் தெரியுமா?

லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் அதிகபட்சமாக 7 அல்லது 8 ,9 போட்டிகளில் வெல்லும் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். 

அரையிறுதிக்கு வரப்போகும் நான்கு அணிகள்... மற்ற அணிகளுக்கு வாய்ப்பு குறைவு.. ஏன் தெரியுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும்பான்மையான அணிகள் 5 போட்டிகளில் விளையாடிவிட்டது. இதில் முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து,ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இருக்கிறது. 

லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் அதிகபட்சமாக 7 அல்லது 8 ,9 போட்டிகளில் வெல்லும் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். 

அந்த வகையில் தற்போது இந்திய அணி ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது. இன்னும் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால் கூட இந்தியா அரையிறுதிக்கு சென்று விடும்.இதே போல் தென்னாப்பிரிக்க அணியும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

அவர்கள் இன்னும் மூன்று போட்டிகளில் வென்றால் கூட அரை இறுதி சுற்று சாத்தியமாகிவிடும். இதேபோன்று நியூசிலாந்து அணியும் நான்கு போட்டிகளில் வென்றுள்ளதால்,அவர்கள் இன்னும் மூன்று போட்டிகளில் வென்றாலும் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் நான்காவது இடத்தை பிடிக்கப் போகும் அணி எது என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா இன்னும் ஐந்து போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. அதில் அவர்கள் ஐந்திலும் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு சென்று விடுவார்கள். இதே போல் பாகிஸ்தான் அணி இன்னும் நான்கு போட்டியில் விளையாட வேண்டி இருக்கிறது. அவர்கள் நான்கிலும் வென்றால் கூட மற்ற அணிகளின் தயவு தேவைப்படும்.

தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்க கூடிய இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தான் வென்று இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஐந்து போட்டிகள் எஞ்சியிருக்கிறது. இந்த ஐந்திலும் வென்றாலும் அவர்கள் மற்ற அணிகளின் தயவு தேவைப்படும் என்ற ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறது. 

இதனால் மேலே சொன்னபடி இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் தான் அரையிறுதி சுற்ற்கு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp