புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா.. அரையிறுதியில் எந்தெந்த அணிகள்?

7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா.. அரையிறுதியில் எந்தெந்த அணிகள்?

உலகக்கோப்பை தொடரின் 33வது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 7-லும் வென்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

அதேபோல் கொல்கத்தா மைதானத்தில் அடுத்து நடக்கவுள்ள போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இலங்கை அணிக்கு கிட்டத்தட்ட உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது. 

ஏனென்றால் 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி, 2 வெற்றியுடன் இலங்கை அணி 4 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும், இலங்கை அணியால் 8 புள்ளிகள் வரை பெற முடியும். இதனால் அரையிறுதி ரேஸில் இருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டதாக பார்க்கலாம்.

உலகக்கோப்பை அரையிறுதி - பாகிஸ்தானுக்கு அடிச்ச அதிஷ்டம்.. இந்தியாவின் வெற்றியால் கிடைத்த அரிய வாய்ப்பு

இதனால் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் எதிர்வரும் போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்றால் மட்டுமே அவர்களுக்கான அரையிறுதி வாய்ப்பும் இருக்கும். 

இதனால் அரையிறுதி ரேஸில் 3 மற்றும் 4 ஆகிய இடங்களுக்கு 5 அணிகள் போட்டியில் இருப்பதால், கடைசி நேரத்தில் என்னென்ன ட்விட்ஸ் நடக்கும் என்றே கணிக்க முடியாத அளவிற்கு களம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp