சிக்சர் மழை... இங்கிலாந்து சாதனை முறியடிப்பு... தென்னாப்பிரிக்கா படைத்த சாதனை!

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.

சிக்சர் மழை... இங்கிலாந்து சாதனை முறியடிப்பு... தென்னாப்பிரிக்கா படைத்த சாதனை!

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடர்ந்து சிக்ஸர்களை அடித்து விளாசி வருகின்றனர். இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்க அணியினர் 15 சிக்சர்கள் அடித்து இருக்கிறார்கள். 

இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி புதிய சாதனை ஒன்று படைத்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்க அணி படைத்திருக்கிறது. 

நடப்பு தொடரில் மட்டும் தென்னாப்பிரிக்க அணி 78 சிக்சர்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்னால் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி 76 சிக்சர்கள் அடித்தது சாதனையாக இருந்தது.

ஒரே நாளில் குயின்டன் டி காக் படைத்த 6 சாதனைகள்.. தென்னாப்பிரிக்க அணி வரலாற்றிலேயே முதல் முறை!

அதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 68 சிக்சர்கள் அடித்தது ரெக்கார்டாக இருந்தது. அதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணி 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 67 சிக்ஸர்கள் அடித்திருந்தது. 

அதற்கு முன்பும் 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 61 சிக்ஸர்கள் அடித்தது சாதனையாக இருந்தது. இதனிடையே நடப்பு உலகக்கோப்பை தொடரில் மைதானங்கள் சிறிய அளவில் அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐசிசி விதிப்படி மைதானத்தின் சுற்றளவு 70 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. ஆனால் பிசிசிஐ பௌண்டரி அளவை 58 மீட்டர் என்ற அளவில் எல்லாம் வைத்திருந்தது. 

இதனால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் செல்வது மட்டுமல்லாமல் ஸ்கோரும் 300க்கு மேல் சுலபமாக அடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp