இடாட் புயல் – உயிரிழப்பு எண்ணிக்கை 417ஆக அதிகரிப்பு

54
People walk on the flooded street of Buzi, central Mozambique, on March 20, 2019 after the passage of the cyclone Idai. - International aid agencies raced on March 20 to rescue survivors and meet spiralling humanitarian needs in three impoverished countries battered by one of the worst storms to hit southern Africa in decades. Five days after tropical cyclone Idai cut a swathe through Mozambique, Zimbabwe and Malawi, the confirmed death toll stood at more than 300 and hundreds of thousands of lives were at risk, officials said. (Photo by ADRIEN BARBIER / AFP)
colombotamil.lk

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை தாக்கிய “இடாட் புயல்’ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 417ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புயலின் தாக்கத்தால் மொசாம்பிக் நாட்டின் சில பகுதிகளில் மரங்கள், மின் கம்பங்கள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் சாய்ந்து விழுந்ததுடன், பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

புயலை தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 10 இலட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘இடாட் புயல்’ மற்றும் மழை, வெள்ளம் பாதிப்புக்கு மொசம்பிக் நாட்டில் மட்டும் 417 உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை, ‘இடாட் புயல்’ காரணமாக அருகாமையில் இருக்கும் கிழக்கு சிம்பாப்வே பகுதியில் சுமார் 250 பேர் பலியானதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.