ஜடேஜாவை பார்த்து பொறாமையால் பொங்கிய அஸ்வின்.. என்ன சொன்னார் தெரியுமா?

களத்தில் மிகவும் வேகமாக இருப்பார். பேட்டிங்கில் மிகவும் எளிமையாக இருப்பார். பெரும்பாலான நாட்களில் அபாரமாக செயல்படுவார்

ஜடேஜாவை பார்த்து பொறாமையால் பொங்கிய அஸ்வின்.. என்ன சொன்னார் தெரியுமா?

அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் நீண்ட காலமாக இரட்டை ஸ்பின்னர்களாக கலக்கி வருகிறார்கள். ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அஸ்வினுக்கு இடம் இல்லை. ஆனால், ஜடேஜா மூன்று அணிகளிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகிறார்.

அஸ்வின் டெஸ்ட் அணியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் நம்பர் 1 ஆல் - ரவுண்டராக இருக்கிறார். அஸ்வினை விட பேட்டிங்கில் ஜடேஜா ஒரளவு முன்னிலையில் இருக்கிறார். 

இது பற்றி ஒரு பேட்டியில் அஸ்வின் பேசுகையில், "ரவீந்திர ஜடேஜாவை பார்த்து தான் நான் பொறாமைப்படுகிறேன். ஜடேஜாவின் பயணமும் என்னுடைய பயணமும் மிகவும் மாறுபட்டவை. ஜடேஜா நாள்தோறும் ஒரே இடத்தில் ஒரு பந்தைப் போடுவார். 

களத்தில் மிகவும் வேகமாக இருப்பார். பேட்டிங்கில் மிகவும் எளிமையாக இருப்பார். பெரும்பாலான நாட்களில் அபாரமாக செயல்படுவார். என்னால் அதைச் செய்ய முடியாது." என்றார்.

மேலும், "யார் சிறந்தவர் என்பது குறித்தும் எங்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை உள்ளது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் எளிமையாக இருப்பார். மிகவும் திறமையானவர். அதிகமாக சிந்திக்கவோ அல்லது ஆர்வமாகவோ இருக்க மாட்டார். ஆனால், நான் அதிகமாக சிந்திப்பேன். கேள்விகள் கேட்பேன்" என அஸ்வின் கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp